கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவ வார்த்தையை உங்கள் செவிகளினால் கேட்டு, பரிசுத்த ஆவியானவரின் துணையுடன் தியானம் செய்து, உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்தை பரிசுத்தப் படுத்தி கிறிஸ்துவின் நாளிலே குற்றமற்றவர்களாள காத்துக் கொள்ளுங்கள்!
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார் சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. யோவான் 1:1-3
தேவன் வார்த்தையினால் சகலத்தையும் உண்டாக்கினார். ஆதி.1 - தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், 1தீமேத். 3:16 - அந்த வார்த்தை மாம்சமானது. யோ.1:14
மாம்சமான அந்த வார்தை (இயேசு கிறிஸ்து) நமக்காக இந்த பூமியில் வந்தார். நமது பாவங்கள் அக்கிரமங்களின் நிமித்தம் சிலுவையிலே மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளிலே உயித்தெழுந்தார். அவருடைய நாமம் தேவனுடைய வார்த்த என்பதே. வெளி.19:13

Listen Audio Bible!